ஓடும் காரில் மாரடைப்பு வாலிபரின் உயிரை காப்பாற்றிய போலீஸ்காரர் தானேயில் சம்பவம்


ஓடும் காரில் மாரடைப்பு வாலிபரின் உயிரை காப்பாற்றிய போலீஸ்காரர் தானேயில் சம்பவம்
x
தினத்தந்தி 31 Aug 2018 4:15 AM IST (Updated: 31 Aug 2018 4:09 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் காரில் மாரடைப்பு ஏற்பட்டு நெஞ்சுவலியில் துடித்த வாலிபரின் உயிரை போலீஸ்காரர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் தானேயில் நடந்து உள்ளது.

தானே,

ஓடும் காரில் மாரடைப்பு ஏற்பட்டு நெஞ்சுவலியில் துடித்த வாலிபரின் உயிரை போலீஸ்காரர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் தானேயில் நடந்து உள்ளது.

மாரடைப்பு

தானே மாவட்டம் பாட்கா பகுதியை சேர்ந்தவர் நிக்கில் (வயது23). நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து கிளம்பிய அவர் தானே நோக்கி காரை ஓட்டி வந்தார். காரில் அவரது தந்தையும் இருந்தார். கார் காரிகாவ் சுங்கச்சாவடி அருகே வந்தபோது நிக்கிலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் காரை ஓரமாக நிறுத்தினார்.

இந்தநேரத்தில் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் பந்தாரிநாத் (35) வந்தார். அவர் நிக்கில் நெஞ்சு வலியில் துடிப்பதை பார்த்தார்.

காப்பாற்றிய போலீஸ்காரர்

உடனடியாக அவர் நேரத்தை வீணாக்காமல் நிக்கிலை பின் சீட்டில் உட்கார வைத்தார். பின்னர் அவரே காரை ஓட்டி சென்று அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் வாலிபரை சிகிச்சைக்காக சேர்த்தார்.

உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதால் நிக்கில் அபாய கட்டத்தை தாண்டியதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துரிதமாக செயல்பட்டு வாலிபரின் உயிரை காப்பாற்றிய போலீஸ்காரரை உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.

Next Story