திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வரையறுக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் வருகிற 1-1-2019 அன்று தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை துரித முறையில் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
வருகிற 8-9-2018, 6-10-2018 மற்றும் 13-10-2018 ஆகிய 4 சனிக்கிழமைகளிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வாசிக்கப்பட உள்ளது.
நடவடிக்கை எடுக்கப்படும்
அதில் பெயர் விடுபட்டிருந்தாலோ, திருத்தங்கள் ஏதேனும் செய்ய வேண்டியிருந்தாலோ, புதியதாக பெயரை சேர்க்க வேண்டியிருந்தாலோ 9-9-2018, 23-9-2018, 7-10-2018 மற்றும் 14-10-2018 ஆகிய 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பணியில் இருக்கும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் உரிய படிவத்தை பெற்று பூர்த்தி செய்து திரும்ப அளிக்கலாம்.
பெறப்படும் அனைத்து படிவங்களும் பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வருகிற 4-1-2019 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story