ரஜினிகாந்த் நிபந்தனை வரவேற்கத்தக்கது நெய்வேலியில் தொல்.திருமாவளவன் பேட்டி


ரஜினிகாந்த் நிபந்தனை வரவேற்கத்தக்கது நெய்வேலியில் தொல்.திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 31 Aug 2018 5:18 AM IST (Updated: 31 Aug 2018 5:18 AM IST)
t-max-icont-min-icon

கட்சியில் சாதி, அமைப்பு ரீதியாக உறுப்பினர்களுக்கு இடம் இல்லை என்ற ரஜினிகாந்தின் நிபந்தனை வரவேற்கத்தக்கது என்று நெய்வேலியில் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

நெய்வேலி,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஒரு திருமண விழாவிற்காக நேற்று நெய்வேலிக்கு வந்தார். முன்னதாக அவர் நெய்வேலி வட்டம் 25-ல் உள்ள என்.எல்.சி. விருந்தினர் இல்ல வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பனை விதைகளை விதைத்தார்.

இதைத் தொடர்ந்து தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் ரஜினிகாந்த் சாதி ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் உள்ளவர்களுக்கு தனது கட்சியில் இடம் இல்லை என்று நிபந்தனை விதித்துள்ளார். இது ஜனநாயக ரீதியான கொள்கை என்பதால் வரவேற்கிறோம். அதை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதை போகபோகத் தான் பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாததால் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கருதி நடிகர்கள் புதிய கட்சிகளை தொடங்கி வருகிறார்கள். இதை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கடலூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தாமரைசெல்வன், கடலூர் மண்டல செயலாளர் திருமாறன், மாநில செயலாளர் குணவழகன், அமைப்பு செயலாளர் இளமாறன், மாவட்ட பொருளாளர் மருதமுத்து, ஒன்றிய செயலாளர் கோவிந்தன், எஸ்.சி., எஸ்.டி. பணியாளர் சங்க தலைவர் ஆசைதம்பி, பொருளாளர் மனோகரன், நெய்வேலி நகர செயலாளர் முருகன், அசுரன், குழந்தைராசு, வேலு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story