தேவியகரம் கிராமத்தில் புகார் பெட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்
காவல்துறை சார்பில் தேவியகரம் கிராமத்தில் வைக்கப்பட்ட புகார் பெட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள தேவியகரம் கிராமத்தில் காவல்துறை சார்பில் புகார் பெட்டி வைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க தலைவர்கள் தேவியரகம் சேகர், துறிஞ்சிப்பட்டு முருகன், வக்கீல் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலந்து கொண்டு புகார் பெட்டியை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கிராம மக்கள் தங்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு வந்து புகார் அளிக்கலாம். அல்லது கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த புகார் பெட்டியில் உங்களது புகாரை எழுதி போடலாம். புகார் பெட்டியில் போடப்படும் தகவல்கள் அனைத்தும் உண்மையானதாக இருக்கவேண்டும். முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு அதனை புகாராக எழுதிப்போட்டு, அதனை விசாரிக்க செல்லும்போது பொய்யான தகவல் என தெரிந்தால் சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து மனுவாக எழுதி புகார்பெட்டியில் போடலாம்.
அவ்வாறு புகார் பெட்டியில் போடப்படும் மனுக்கள் மீது காவல்துறை சார்பில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். திருக்கோவிலூர் உட்கோட்டத்துக்குட்பட்ட 10 போலீஸ் நிலையங்களில் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட தேவியகரத்தில் தான் முதன் முறையாக புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் மற்ற போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் புகார் பெட்டி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அங்குள்ள நூலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்ததோடு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை மோகனா, ஊராட்சி செயலாளர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் பாபு நன்றி கூறினார்.

Related Tags :
Next Story