நயினார்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு


நயினார்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 31 Aug 2018 5:36 AM IST (Updated: 31 Aug 2018 5:36 AM IST)
t-max-icont-min-icon

நயினார்பாளையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் திருக்கடையூரில் இருந்து விருத்தாசலம், வேப்பூர், நயினார்பாளையம் வழியாக சேலம் சென்றார். அப்போது நயினார்பாளையத்தில் விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி. மு.க. செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி பேசினார். முன்னதாக அவருக்கு குமரகுரு எம்.எல்.ஏ. மாலை அணிவித்தார்.

இதில் காமராஜ் எம்.பி., ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், ராஜசேகர், மாவட்ட மகளிரணி தலைவி அழகுவேல்பாபு, நகரசெயலாளர் பாபு, உளுந்தூர்பேட்டை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சாய்ராம், மாவட்ட அவைத் தலைவர் பச்சையாப்பிள்ளை, மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் வெற்றிவேல், மாவட்ட அம்மா பேரவை முன்னாள் தலைவர் ஞானவேல் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story