புஞ்சைபுளியம்பட்டி அருகே தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அச்சடித்து ஒட்டிய தொழிலாளி
புஞ்சைபுளியம்பட்டி அருகே உயிருடன் இருக்கும்போதே தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தொழிலாளி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புஞ்சைபுளியம்பட்டி,
பொதுவாக ஒருவர் இறந்த பின்னர் தான் அவருக்கு உறவினர்கள், நண்பர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டி இரங்கல் தெரிவிப்பார்கள். ஆனால் உயிருடன் இருக்கும்போதே ஒருவர் தான் இறந்ததாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அச்சடித்து சுவர்களில் ஒட்டிவிட்டு, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:–
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசு (வயது 40). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி அன்பரசி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் அன்பரசு நேற்று காலை அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டின் சுவர்கள் மற்றும் மரங்களில் ஒரு போஸ்டர் ஒட்டினார்.
15–க்கும் மேற்பட்ட இடங்களில் அந்த போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அதில், ‘கண்ணீர் அஞ்சலி தோற்றம்... மறைவு....புதுப்பாளையம் பி.அன்பரசு 31–8–2018 வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். இப்படிக்கு குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்’ என்று அவர் பெயரே எழுதப்பட்டு இருந்தது.
இதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் வேகமாக பரவியது. இதையடுத்து உறவினர்கள் அக்கம்பக்கம் விசாரித்தனர். ஆனால் அன்பரசன் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. உடனே அனைவரும் அந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை தேடித்தேடி வந்து படித்து சிரித்தபடி சென்றார்கள். சிலர், ‘ஏன் உயிருடன் இருக்கும்போதே தனக்குத்தானே இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினார்’ என்று பேசிக்கொண்டார்கள்.
இந்த நிலையில் அன்பரசு தற்கொலை செய்து கொள்வதற்காக வீட்டில் விஷம் குடித்துவிட்டு வாந்தி எடுத்தார். இதைப்பார்த்த உறவினர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து அவரை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
உயிருடன் இருக்கும்போதே அன்பரசு எதற்கு தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அச்சடித்து ஒட்டினார் என்று புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story