சாத்தூரில் அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி


சாத்தூரில் அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி
x
தினத்தந்தி 1 Sept 2018 4:15 AM IST (Updated: 1 Sept 2018 12:07 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூரில் நடந்த தமிழக அரசின் ஒரு ஆண்டு சாதனை விளக்க சைக்கிள் பேரணியில் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி உதய குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சாத்தூர்,

தமிழக அரசின் சாதனையை விளக்கும் விதமாக ஜெயலலிதா பேரவை சார்பில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. இதனை மதுரையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து சிவகங்கை, ராமநாதபுரம் திருவண்ணாமலை மாவட்டங்களில் பேரணி நடந்தது. 4-வது கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் 4 நாட்கள் பேரணி நடைபெறுகிறது.

இதன் தொடக்கவிழா நேற்று முன்தினம் நடந்தது. நேற்று காலை, சாத்தூரில் இருந்து தொடங்கிய சைக்கிள் பேரணியை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். பேரவை செயலாளரும் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சுமார் ஆயிரம் பேர் சைக்கிளில் தமிழக அரசின் ஒரு ஆண்டு சாதனையை விளக்கி சாத்தூரின் முக்கிய தெருக்கள் வழியாக வந்தனர். அப்போது நூலகத்துக்கு புத்தகம் வழங்கப்பட்டது. மேலும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

பேரணியின்போது மரம் நடுதல், கோவில்களில் உழவாரப்பணி, கண்மாய் தூர்வாருதல், பள்ளிகளுக்கு நூல் வழங்குதல் ஒவ்வொரு நாளும் மாலையில் தலைமை பண்பு, ஆளுமைப்பண்பு, திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தெரிவித்தார். இதில் ராதாகிருஷ்ணன் எம்.பி. சாத்தூர் நகர செயலாளர் வாசன் முன்னாள் நகர் மன்ற தலைவர் டெய்சிராணி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் சேதுராமானுஜம் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து வெம்பக்கோட்டை அருகிலுள்ள ஏழாயிரம்பண்ணையை பேரணி சென்றடைந்தது. அங்கு அமைச்சர்களுக்கும் பேரணியில் கலந்து கொண்டோருக்கும் வரவேற்பு வழங்கப்பட்டது.

இதில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ராமராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், முன்னாள் தொகுதி செயலாளர் எட்டக்காப்பட்டி சீனிவாசன், முன்னாள் யூனியன் தலைவர் ரவிச்சந்திரன், தொழில் அதிபர் நாகஜோதி, முன்னாள் ஊராட்சி தலைவர் பார்த்தசாரதி, திருமலைராஜா, எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், செவல்பட்டி அசோக்குமார், வெம்பக்கோட்டை முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் பல கிராமங்களுக்கு சென்று அரசின் சாதனைகளை எடுத்துரைத்தார்கள். அடுத்து ராஜபாளையம் பகுதியில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. ஸ்ரீவில்லி புத்தூர் தொகுதி வழியாக சென்று இன்று (சனிக்கிழமை) இரவு சிவகாசி தொகுதியை சென்று அடைகின்றனர்.

இறுதியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு காரியாபட்டியில் நல உதவி வழங்கி பொதுகூட்டத்துடன் 4-ம் கட்ட சைக்கிள் பேரணி நிறைவடைகிறது.

Next Story