சேலம் மாநகராட்சி பகுதியில் 12 பசுமை வெளி பூங்காக்கள்
சேலம் மாநகராட்சி பகுதியில் ரூ.5.7 கோடிசெலவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 12 பசுமை வெளி பூங்காக்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
சேலம்,
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் ரூ.5 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் 12 பசுமை வெளி பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காக்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி அம்மாபேட்டை மண்டலம் அய்யாசாமி பசுமைவெளி பூங்கா வளாகத்தில் நேற்று காலையில் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய பசுமை வெளி பூங்காவை திறந்து வைத்தார். மேலும், அவர் மாநகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இதர பசுமை வெளி பூங்காக்களையும் தொடங்கி வைத்தார். பின்னர், அவர் பசுமை வெளி பூங்காக்களின் சிறப்பம்சங்கள் அடங்கிய குறும்படத்தை பார்வையிட்டார்.
இந்த பசுமைவெளி பூங்காவில் உள்ள மரம், செடி, கொடிகளிலிருந்து கிடைக்கக் கூடிய இழை, தழை போன்ற மக்கும் கழிவுகளை கொண்டு இயற்கை உரம் தயாரிப்பதற்காக தள கலவை உரக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தயாரிக்கப்பட்ட பசுமை உரத்தை விவசாயிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதையடுத்து சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் (ஸ்மார்ட் சிட்டி) திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்வதற்கு ரூ.1 கோடியே 38 லட்சம் மதிப்பில் 55 இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ரோகிணி, மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், எம்.பி.க்கள் பன்னீர்செல்வம், காமராஜ், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெங்கடாசலம், சக்திவேல், மனோன்மணி, வெற்றிவேல், மருதமுத்து, சித்ரா, முன்னாள் மேயர் சவுண்டப்பன், சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.பொருளாளர் பங்க் வெங்கடாசலம், துணை செயலாளர் ஏ.கே.எஸ்.எம்.பாலு, பகுதி செயலாளர்கள் தியாகராஜன், சண்முகம், சரவணன், யாதவமூர்த்தி, மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சூரமங்கலம் மண்டலத்தில் 19-வது வார்டு தர்ம நகர், 23-வது வார்டில் முல்லை நகர், 24-வது வார்டில் கிழக்கு மேம்பால நகர், 25-வது வார்டில் அபிராமி கார்டன், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 6-வது வார்டில் பிரகாசம் நகர், பரமன் நகர், குறிஞ்சி நகர், 8-வது வார்டில் கம்பர் தெரு, அம்மாபேட்டை மண்டலத்தில் 40-வது வார்டில் அய்யாசாமி பார்க், 43-வது வார்டில் யெல்லீஸ் கார்டன், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 50-வது வார்டில் அபிராமி கார்டன், காந்திநகர் ஆகிய 12 இடங்களில் பொதுமக்களின் வசதிக்காகவும், குழந்தைகளின் பொழுதுபோக்கிற்காகவும் பசுமை வெளி பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பூங்காக்களில் மூத்த குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய ஏதுவாக நடைபாதைகள், 8 வடிவிலான நடைபயிற்சி மேடைகள், தியான மண்டபம், மூலிகை பண்ணைகள், இறகுப்பந்து, கூடைபந்து விளையாட்டு திடல்கள், உடற்பயிற்சி கூடங்கள், குழந்தைகளை கவரும் வகையில் வண்ண ஓவியங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், வண்ண ஒளி விளக்குகள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சூரிய ஒளி சக்தியின் மூலம் மின்சாரம் பெறும், சூரிய மின்தகடுகள் அனைத்து பூங்காக்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story