விளாத்திகுளம் பெரிய கண்மாய் தூர்வாரும் பணி தொடங்கியது


விளாத்திகுளம் பெரிய கண்மாய் தூர்வாரும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 1 Sept 2018 2:30 AM IST (Updated: 1 Sept 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் பெரிய கண்மாய் தூர்வாரும் பணி தொடங்கியது.

விளாத்திகுளம், 

விளாத்திகுளம் பெரிய கண்மாய் தூர்வாரும் பணி தொடங்கியது.

பெரிய கண்மாய்

விளாத்திகுளம்-மதுரை மெயின் ரோட்டில் சுமார் 330 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய கண்மாய் உள்ளது. வைப்பாற்றின் மூலம் பாசன வசதி பெறும் இந்த குளம் நிரம்பினால்தான், இதன் அருகில் உள்ள நெடுங்குளம், மேல்மாந்தை உள்ளிட்ட 15 குளங்களுக்கு தண்ணீர் செல்லும். இதன் மூலம் விளாத்திகுளம் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, விவசாயம் செழிக்கும்.

விளாத்திகுளம் பெரிய கண்மாய் முழுவதும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து, மண் மேடாக காட்சி அளித்தது. இதையடுத்து விளாத்திகுளம் சுற்று வட்டார பகுதி மக்கள் சார்பில், நீர்நிலை பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டு, அதன் மூலம் பொதுமக்களின் பங்களிப்புடன் விளாத்திகுளம் பெரிய கண்மாய் தூர்வாரும் பணி தொடங்கியது.

தூர்வாரும் பணி

முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தலைமை தாங்கி, கண்மாயை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். 5 பொக்லைன் எந்திரங்கள் மூலம் கண்மாயில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றினர். தொடர்ந்து கண்மாயை தூர்வாரி, கரையை பலப்படுத்தும் பணி நடந்தது. மழைக்காலத்துக்கு முன்பாக கண்மாய் முழுவதும் தூர்வார திட்டமிட்டு உள்ளனர்.

விளாத்திகுளம் தாசில்தார் லெனின், நீர்நிலை பாதுகாப்பு இயக்க தலைவர் மாவேல்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story