5 பேர் கைதை கண்டித்து மக்கள் மேடை அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


5 பேர் கைதை கண்டித்து மக்கள் மேடை அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Sept 2018 3:00 AM IST (Updated: 1 Sept 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மக்கள் மேடை அமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் சதித்திட்டம் தீட்டிய கடிதத்தின் அடிப்படையில், மவோயிஸ்டு ஆதரவாளர்கள் என்று கூறி 5 பேரை மராட்டிய போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மக்கள் மேடை அமைப்பு மற்றும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு சென்னை மக்கள் மேடை ஒருங்கிணைப்பாளர் செல்வா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் இந்து என்.ராம், பத்திரிகையாளர் பி.சாய்நாத், கவிஞர் சல்மா, எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் அப்துல் சமது, உதய குமார், சமூக ஆர்வலர் கல்பனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story