ஸ்டெர்லைட் ஆய்வு குழுவில் தமிழர் ஒருவரை தலைவராக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் திருமாவளவன் வலியுறுத்தல்
ஸ்டெர்லைட் ஆய்வு குழுவில் தமிழர் ஒருவரை தலைவராக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
தூத்துக்குடி,
ஸ்டெர்லைட் ஆய்வு குழுவில் தமிழர் ஒருவரை தலைவராக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
பேட்டி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.15 லட்சத்துகான காசோலையை திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து வழங்கி விட்டு வருகிறோம். மேலும் ரூ.15 லட்சம் நிவாரண பொருட்கள் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் வழங்க உள்ளோம்.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்வதற்காக தமிழர் அல்லாத ஒரு நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தின் விருப்பப்படி தமிழர் அல்லாத நீதிபதியை நியமித்து இருப்பது, எந்த அளவுக்கு கோர்ட்டும், ஆட்சியாளர்களும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு துணை போகிறார்கள் என்பதை உணர்த்துகிறது.
தமிழரை நியமிக்க...
இவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு ஏதுவான சூழலை உருவாக்கி தருகிறார்கள் என்று மத்திய, மாநில அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனத்தை தெரிவிக்கிறது. தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட்டு, தமிழர் ஒருவரை இந்த குழுவுக்கு தலைவராக நியமிக்க மனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story