பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணினி மயமான வகுப்பறைகள்
ராசிபுரம் அருகே பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.15 லட்சம் மதிப்பில் கணினிமயமாக்கப்பட்ட வகுப்பு அறைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியம் பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.15 லட்சம் மதிப்பில் 20 கணினி மயமாக்கப்பட்ட (ஸ்மார்ட் கிளாஸ் ரூம்) வகுப்பறைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வகுப்பறைகள் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அதிகாரி அருளரங்கன் வரவேற்றார். நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் முன்னிலை வகித்து பேசினார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விழாவில் கலந்து கொண்டு கணினி மயமாக்கப்பட்ட வகுப்பறைகளை திறந்து வைத்தார். கணினியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணியும், கண்காணிப்பு கேமராவை சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜாவும் திறந்து வைத்து பேசினார்கள். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர் (நாமக்கல்), சந்திரசேகரன் (சேந்தமங்கலம்), பேராசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் பேசினார்கள்.
விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது கூறியதாவது:-
1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்திட்டப்படி எதிர்காலத்தில் மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வையும் தமிழக மாணவர்கள் சந்திக்க முடியும். இந்த அரசு தொலைநோக்குடன் செயல்பட்டு வருகிறது. 412 மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படும். மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல் நல்ல கல்வி கற்று பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்ப்பதுடன் தேசபக்தி உள்ளவர்களாக வளர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயன் நன்றி கூறினார்.
விழாவில் ராசிபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் காளியப்பன், இ.கே.பொன்னுசாமி, வக்கீல் தாமோதரன், எல்.எஸ்.மணி, பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலசுப்பிரமணியன், மசக்காளிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பிரகாசம், ராசிபுரம் முன்னாள் கவுன்சிலர் சீரங்கன், வடுகம் கூட்டுறவு சங்கத் தலைவர் பாலன் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அமைச்சர்கள் 3 பேரும் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் கூட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சம் மதிப்பில் பட்டணம் பேரூராட்சி 2-வது வார்டு நேரு நகர் ரோடு மற்றும் அரசு பள்ளி தென்புறம் தார்சாலை அமைப்பதற்கான பணியை தொடங்கி வைத்தனர்.

Related Tags :
Next Story