இரண்டு ஆண்டுகளாகியும் திருமண நிதியுதவி தொகை கிடைக்காமல் காத்திருக்கும் ஏழை பெண்கள்
தஞ்சை மாவட்டத்தில் திருமண உதவி தொகைக்காக விண்ணப்பித்துள்ள ஏழைப்பெண்கள் இரண்டு ஆண்டுகளாகியும் நிதி கிடைக்காமல் காத்து உள்ளனர். விரைவில் இந்த தொகை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்து உள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி,
ஏழை பெண்கள் திருமணத்திற்கு உதவ வேண்டும். அதே சமயம் பெண்கள் தங்கள் கல்வி தகுதியை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டம். இந்த திட்டத்தின் கீழ் தற்போது 10 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம், பட்டப்படிப்பு படித்த பெண்கள் திருமணத்திற்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது.
திருமணம் நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக உரிய முறையில், உரிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் விண்ணப்பம் வழங்கப்பட வேண்டும். விண்ணப்பத்தை பரீசிலனை செய்து மாவட்ட சமுக நலத்துறைக்கு அனுப்பி தகுதியான விண்ணப்பதாரருக்கு தங்க காசு நேரிலும், தொகை அந்தந்த மணப்பெண்ணின் தந்தையின் வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்படும்.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நிதி உதவி கோரி விண்ணப்பம் செய்தவர்களுக்கு தங்கம் மற்றும் தொகை வழங்கப்படவில்லை என்று விண்ணப்பம் அனுப்பி காத்திருப்போர் தெரிவிக்கின்றனர். கடந்த 31.12.2016 வரை உள்ள விண்ணப்பங்களுக்கு தொகை மற்றும் தங்ககாசு வழங்கப்பட்டு வி்ட்டதாக தெரிய வருகிறது.
இதன் பின்னர் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு மாவட்ட சமுக நல அலுலவலகத்திற்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்களுக்கு இன்னும் உதவித்தொகை வழங்கப்படவில்லை. விண்ணப்பித்த ஏழை பெண்கள் அனைவரும் தங்களுக்கு எப்போது இந்த தொகை கிடைக்கும் என்ற ஆவலுடன் காத்து உள்ளனர். ஏழை மக்களுக்கு உதவும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் தொகையை எதிர்நோக்கி கடன் வாங்கி செலவு செய்த ஏழைகளுக்கு இந்த தொகை கிடைப்பது தாமதம் ஆவது மிகுந்து சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது,
இந்த காலதாமதத்திற்கு என்ன காரணம் என்று இந்த துறையுடன் தொடர்புடைய சமுக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-
தஞ்சை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி கடந்த 1½ ஆண்டாக பணியில் இல்லை. கூடுதல் பொறுப்பாக அரியலூர் மாவட்ட அதிகாரி இந்த பொறுப்பை கவனித்து வருகிறார். அவர் எப்போதாவது ஒரு முறைதான் தஞ்சை அலுவலகத்திற்கு வருகிறார். இதனால் ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டிய பல சமுக நல உதவிகள் தாமதம் ஏற்படுகின்றன.
தஞ்சை மாவட்டத்தில் இன்றய நிலையில் ஏறக்குறைய 4329 விண்ணப்பங்கள் திருமண உதவி கேட்டு காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. திருமணத்திற்காக கொடுக்க வேண்டிய உதவி தொகை திருமணம் செய்தவர்களின் பிரசவ செலவுக்காவது பயன்படுமா என்றால் அதுவும் இல்லை என்ற நிலையே தஞ்சை மாவட்டத்தில் நிலவுகிறது.
அதிகாரிகள் கவனிப்பார்களா?
இது மட்டும் அல்லாமல் திருமண உதவி விண்ணப்பம் கொடுக்கும்போது வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் கொடி நாள் வசூல் மற்றும் இந்த மனு தொடர்பான விசாரணைக்கு வருபவர்களுக்கு செலவு என்று பல வழிகளில் செலவு செய்து காத்திருப்பவர்களுக்கு எப்போது இந்த உதவி தொகை கிடைக்கும் என்று தெரியாத நிலையில் கடன் வாங்கி திருப்பி செலுத்த இயலாமல் புலம்பிக் கொண்டுள்ளனர்.
இதனால் இந்த கோரிக்கை தொடர்பாக அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி திருமண உதவி தொகைக்காக காத்து இருக்கும் தங்ககளின் வாட்டத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதிகாரிகள் கவனிப்பார்களா?.

Related Tags :
Next Story