ஏ.டி.எம். மையத்தில் உதவி செய்வது போல் நடித்து பணம் அபேஸ் செய்து வந்த வாலிபர் பிடிபட்டார்


ஏ.டி.எம். மையத்தில் உதவி செய்வது போல் நடித்து பணம் அபேஸ் செய்து வந்த வாலிபர் பிடிபட்டார்
x
தினத்தந்தி 1 Sept 2018 5:17 AM IST (Updated: 1 Sept 2018 5:17 AM IST)
t-max-icont-min-icon

ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவி செய்வது போல நடித்து பணம் அபேஸ் செய்து வந்த ஒடிசா வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவி செய்வது போல நடித்து பணம் அபேஸ் செய்து வந்த ஒடிசா வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

உதவி செய்வது போல...

மும்பை சாக்கிநாக்கா பகுதியில் சம்பவத்தன்று ஒருவர் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவருக்கு உதவி செய்வது போல நடித்து அவரது வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை அபேஸ் செய்தார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் சாக்கிநாக்கா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மோசடியில் ஈடுபட்டவர் ஒடிசாவை சேர்ந்த சம்பாவ் (வயது28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை வலைவீசி தேடிவந்தனர்.

வாலிபர் கைது

இந்தநிலையில் சம்பவத்தன்று மும்பை விமான நிலையம் அருகே உள்ள ஓட்டலில் சம்பாவ் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் ஏ.டி.எம். மையத்தில் உதவி செய்வது போல நடித்து அந்தேரி, மலாடு, ஜூகு உள்ளிட்ட மேற்கு புறநகர் பகுதிகளில் பலரிடம் பணம் அபேஸ் செய்து வந்தது தெரியவந்தது. மேலும் அவர் ஒடிசாவில் இருந்து மும்பைக்கு சொகுசு காரில் வந்து சென்றதும் தெரியவந்துள்ளது.

Next Story