மாவட்ட செய்திகள்

காரைக்குடியில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + LIC staff demonstrated in Karaikudi

காரைக்குடியில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காரைக்குடியில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய அளவில் நேற்று எல்.ஐ.சி ஆயுள் காப்பீட்டு முகவர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்குடி,

எல்.ஐ.சி. பாலிசிதாரர்களுக்கு பாலிசியின் மீது வழங்கப்படும் போனஸ் தொகையை உயர்த்த வேண்டும், பிரிமிய தொகையின் மீதும், தாமத கட்டணத்தின் மீதும் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும், காலாவதியான பாலிசிகளை புதுப்பித்தலுக்கான கால அளவை 2 ஆண்டில் இருந்து 5 ஆண்டுகளாக மாற்ற வேண்டும், லாபம் ஈட்டும் நிறுவனங்களில் மட்டும் எல்.ஐ.சி. நிதியை முதலீடு செய்ய வேண்டும், ஐ.ஆர்.டி.ஏ. நிர்ணயித்துள்ள அளவிற்கு முகவர்களுக்கு கமி‌ஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் நேற்று எல்.ஐ.சி ஆயுள் காப்பீட்டு முகவர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோன்று சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்குடி கிளை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முகவர் சங்க தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். முகவர் கோட்ட செயலாளர் சார்லஸ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் முருகானந்தம், பொருளாளர் ரவிச்சந்திரன், முருகேசன், வள்ளுவன் மற்றும் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.