நெற்கட்டும்செவலில் பிறந்தநாள் விழா: பூலித்தேவன் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை


நெற்கட்டும்செவலில் பிறந்தநாள் விழா: பூலித்தேவன் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 2 Sept 2018 3:30 AM IST (Updated: 1 Sept 2018 11:44 PM IST)
t-max-icont-min-icon

நெற்கட்டும்செவலில் நடந்த பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில் அவரது சிலைக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வாசுதேவநல்லூர், 

நெற்கட்டும்செவலில் நடந்த பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில் அவரது சிலைக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பூலித்தேவன் பிறந்தநாள் விழா

நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும்செவலில் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் மாளிகை உள்ளது. அங்கு நேற்று அவரது 303-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் தமிழக அரசு சார்பில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன், மணிகண்டன், பாஸ்கர், துரைக்கண்ணு ஆகியோரும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

யார், யார்?

விழாவில் மாவட்ட கலெக்டர் ஷில்பா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட திட்ட இயக்குனர் பழனி, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன், கே.பி.முனுசாமி, ராஜகண்ணப்பன், எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், வசந்தி முருகேசன், நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பிரபாகரன் எம்.பி., நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, எம்.எல்.ஏ.க்கள் முருகையா பாண்டியன், செல்வமோகன்தாஸ் பாண்டியன், மனோகரன் மற்றும் சுதா பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து முன்னாள் கழக அமைப்பு செயலாளர் நாராயணபெருமாள், வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் மூர்த்தி பாண்டியன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் கண்ணன் என்ற ராஜீ, துணை செயலாளர் சொர்ணா, நெல்லை நகர வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தலைவன்கோட்டை விஜயபாண்டியன், நெல்லை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன், இ.நடராஜன், புதுக்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முத்துக்குட்டி பாண்டியன், நெல்லை புறநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ் உள்பட பலர் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கல்வி உபகரணங்கள்

முன்னதாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நெற்கட்டும்செவலில் பல்வேறு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் நோட்டுகள் மற்றும் கல்வி உபகரணங்களை பரிசாக வழங்கினார்.

Next Story