பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடியை மாற்ற நடவடிக்கை கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடியை மாற்ற நடவடிக்கை கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 2 Sept 2018 3:30 AM IST (Updated: 2 Sept 2018 12:01 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடியை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

தூத்துக்குடி, 

பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடியை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

கண்காட்சி

தூத்துக்குடியில் திடக்கழிவுகளை கையாளுதலில் உள்ள நவீன தொழில்நுட்பம், பிளாஸ்டிக்குக்கு மாற்று பொருட்களை அறிமுகம் செய்தல் போன்றவற்றை கருத்தில் கொண்டு 2 நாள் இயற்கை திருவிழா கண்காட்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்து வருகிறது. கண்காட்சி தொடக்க விழா நேற்று காலை நடந்தது.

மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

கண்காட்சியில் திடக்கழிவுகளை கொண்டு உரம் தயாரித்தல், மாடித்தோட்டம் அமைத்தல், பிளாஸ்டிக்குக்கு மாற்றுபொருட்களை பயன்படுத்துதல், இயற்கை மூலப்பொருட்களால் ஆன கைவினை பொருட்கள், பாரம்பரிய விளையாட்டு சாதனங்கள், அதிகப்படியான குப்பைகள் உருவாகும் இடங்களில் அதனை கையாளுவதில் உள்ள நவீன தொழில்நுட்பங்கள் இடம்பெற்று உள்ளன. இந்த கண்காட்சியை பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

3 லட்சம் பிளாஸ்டிக் உறைகள்

இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறும்போது, தூத்துக்குடி மாநகராட்சியை பிளாஸ்டிக் இல்லாத மாநகராட்சியாக மாற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளி மாணவ-மாணவிகள் மூலம் பிஸ்கட், சிப்ஸ் உள்ளிட்ட உணவு பதார்த்தங்களின் பிளாஸ்டிக் உறைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.

அதன்படி 300 கிலோ எடையுள்ள 3 லட்சம் பிளாஸ்டிக் உறைகள் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஜனவரி 1-ந் தேதி தூத்துக்குடி மாவட்டம் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாறுவதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தாருடன் ஆலோசனை நடத்தி பிளாஸ்டிக்கை தவிர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.

Next Story