தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வூதியம் வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வூதியம் வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Sept 2018 2:30 AM IST (Updated: 2 Sept 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.

ஓட்டப்பிடாரம்,

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.

ஆர்ப்பாட்டம்

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலை நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் கணேசமூர்த்தி, துணை தலைவர் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் அறிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும், 60 வயது நிரம்பிய விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாநில துணை தலைவர் பெரும்படையார், மாவட்ட செயலாளர் நல்லையா, ஒன்றிய செயலாளர் அசோக்குமார், மாநில குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளாத்திகுளம்-எட்டயபுரம்

விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தாலுகா தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் பிச்சையா, அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் பாலமுருகன், ஏ.ஐ.டி.யு.சி. முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எட்டயபுரம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க தாலுகா தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நல்லையா, தாலுகா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை செயலாளர் குருசாமி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் நாகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story