மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலையத்தில்கொழும்பில் இருந்து கடத்தி வந்த ரூ.6 லட்சம் தங்கம் பறிமுதல் + "||" + The Rs 6 lakh seized smuggled gold

சென்னை விமான நிலையத்தில்கொழும்பில் இருந்து கடத்தி வந்த ரூ.6 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில்கொழும்பில் இருந்து கடத்தி வந்த ரூ.6 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் கொழும்பில் இருந்து கடத்தி வந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த வைத்தீஸ்வரன்(வயது 32) என்பவரின் உடைமைகளை சோதனை செய்த போது அவரது சூட்கேசில் எதுவும் இல்லை.

ஆனால் அந்த சூட்கேசின் அடியில் இருந்த சக்கரத்தின் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த சக்கரங்களை பிரித்து பார்த்தனர். அதில் தங்க கம்பிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 185 கிராம் தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள், அந்த தங்கத்தை அவர் யாருக்காக கொழும்பில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்?, இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.