மாவட்ட செய்திகள்

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் ஜெல்லி மீன்களின் எண்ணிக்கை அதிகரிப்பு + "||" + The number of jellyfish increase in Kodikanal star lake

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் ஜெல்லி மீன்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் ஜெல்லி மீன்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியில் மீண்டும் ஜெல்லி மீன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல்,

திண்டுக்கல் கொடைக்கானல் நகரில் புகழ்பெற்ற நட்சத்திர ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 4½ கி.மீ. சுற்றளவு கொண்டது. ஆங்கிலேயர்களால் 100 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த ஏரி தற்போது மாசடைந்து வருகிறது. ஏரியை சுற்றியுள்ள ஓட்டல்கள், விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் நேரடியாக ஏரியில் கலக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஏரியினை தூர்வாரவும், தூய்மைப்படுத்தவும் அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்தும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. பழனி நகருக்கு குடிநீராக பயன்படும் இந்த ஏரி தண்ணீரில் ‘லிம்னோக்னிடா’ என்ற ஜெல்லிமீன் இருந்ததை கடந்த ஆண்டு படகு சவாரி செய்த மாணவர் ஒருவர் கண்டுபிடித்தார்.

இதுகுறித்து தனியார் ஆய்வகத்தில் ஆய்வு நடத்தியதில், கடல்களில் மட்டுமே காணப்படும் ஜெல்லி மீன்கள் ஏரியில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் இதுகுறித்து மீன்வளத்துறையினரும் ஆய்வு நடத்தினர். ஜெல்லிமீன்கள் கரையில் ஒதுங்கிக் கிடக்கும்போது பார்ப்பதற்கு மிக அழகான உயிரினமாகவும், நீரில் உலாவி கொண்டிருக்கும் போது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உயிரினமாகவும் இருக்கின்றன.

இந்த மீன்கள் குறித்து இதுவரை அறிக்கை அளிக்காத நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியது. இதனால் ஜெல்லி மீன்களின் எண்ணிக்கை குறைந்தது.

தற்போது மீண்டும் ஏரியில் ஜெல்லி மீன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ஏரி நீர் அதிக மாசடைவதுடன் தண்ணீரை பயன்படுத்துபவர்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர். மேலும் ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

எனவே அரசு உடனடி நடவடிக்கை எடுத்து ஜெல்லி மீன்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.தொடர்புடைய செய்திகள்

1. நேரு பூங்காவில் மழையால் அழுகிய மலர்கள் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
கோத்தகிரி நேரு பூங்காவில் மழையால் மலர்கள் அழுகின. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
2. 13 நாட்களுக்கு பிறகு பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி
கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு 13 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
3. கொடைக்கானலில் நிரம்பி வழியும் நட்சத்திர ஏரி: கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கொடைக்கானல் நட்சத்திர ஏரி நிரம்பி வழிவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4. கொடைக்கானலில் ‘கஜா’ புயலின் தாக்கம் அதிகரிக்க காரணம் என்ன? - விஞ்ஞானிகள் விளக்கம்
கொடைக்கானல் பகுதியில் ‘கஜா’ புயலின் தாக்கம் அதிகரிக்க காரணம் குறித்து வானிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
5. கொடைக்கானலில் ‘கஜா’ புயலால் பலத்த மழை: மண் சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் பலி
கொடைக்கானலில், மண்சரிவில் சிக்கி கட்டிட தொழிலாளர்கள் 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.