வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதல் போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும்
வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதல் போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சீர்காழி,
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் வைத்தியநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைத்தியநாதர், தையல்நாயகி அம்மன், விநாயகர், செல்வமுத்துக் குமாரசாமி, அங்காரகன் (செவ்வாய்), தன்வந்திரி ஆகிய தெய்வங்கள் தனி சன்னதிகளில் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றன. இந்த கோவில் பரிகாரதலமாக இருப்பதால் தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் இந்த கோவிலை சுற்றிலும் 4 வீதிகளிலும் ஏராளமான திருமண மண்டபங்கள் இருப்பதால் முகூர்த்த நாட்களில் இந்த பகுதியில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
மேலும் கோவிலுக்கு வருபவர்கள் வாகனங்களை மயிலாடுதுறை செல்லும் சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்போது 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் வைத்தீஸ்வரன்கோவிலில் சாலையை அகலப்படுத்த வேண்டும் அல்லது ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும்.
இதேபோல் வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதல் போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Tags :
Next Story