நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற பாடுபட வேண்டும்
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று, அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கபிஸ்தலம்,
பாபநாசம் ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றிய அவைத்தலைவர் சபேசன் தலைமையில் கபிஸ்தலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட பொருளாளர் கோபிநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார், பொதுக்குழு உறுப்பினர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் நாகையன் வரவேற்று பேசினார். எம்.பி.க்கள் வைத்திலிங்கம், பாரதிமோகன், அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் துரைக்கண்ணு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறுவை தொகுப்பு திட்டத்துக்கு ரூ.64 கோடி ஒதுக்கீடு செய்தார். ஆனால் தற்போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறுவை தொகுப்பு திட்டத்துக்கு ரூ.115 கோடியே 65 லட்சம் ஒதுக்கீடு செய்து விவசாயிகளின் பாதுகாவலனாக விளங்கி வருகிறார். சதிகாரர்களிடம் இருந்து இந்த ஆட்சியையும் கட்சியையும் நம்முடைய முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மீட்டு உள்ளனர். பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் வைத்திலிங்கம் எம்.பி பேசியதாவது:- மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சி 5 ஆண்டுகளை நிச்சயமாக நிறைவு செய்வதுடன் தொடர்ந்து மீண்டும் ஆட்சியை பிடிக்கும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடு பட வேண்டும். குறிப்பாக மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இதற்கு முதலில் 20 பேர் கொண்ட பூத் கமிட்டிகளை அமைத்து பணிகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் சட்ட போராட்டம் நடத்தி காவிரியில் தண்ணீரை பெற நடவடிக்கை எடுத்து வெற்றிகண்ட தமிழக முதல்-அமைச்சர், துனை முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது, நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபடுவது, அமைச்சர் துரைக்கண்ணுவை தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக நியமனம் செய்ததற்கு நன்றி தெரிவிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story