ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் ‘செல்பி’ எடுத்த வாலிபர் தவறி விழுந்து சாவு
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் செல்பி எடுத்த வாலிபர் அணையில் தவறி விழுந்து இறந்தார். அவரை காப்பாற்ற சென்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவரும் நீரில் மூழ்கி பலியானார்.
ஓசூர்,
கர்நாடக மாநிலம், பெங்களூரு ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் தேவேந்திரா (வயது 21). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்தார். ஓசூர் பகுதியில் நேற்று மின்தடை என்பதால் தேவேந்திராவுக்கு வேலை இல்லை. இதனால் தன்னுடன் வேலை செய்யும் நண்பர்கள் 2 பேருடன், கெலவரப்பள்ளி அணைக்கு தேவேந்திரா சென்றார்.
அங்கு அணையில் இருந்து, தென்பெண்ணை ஆற்றில் மதகு வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் அருகே, தேவேந்திரா உள்பட 3 பேரும் தங்களின் செல்போன்கள் மூலமாக செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஓசூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. சிவில் இறுதி ஆண்டு படித்து வரும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த கேசவன் (22) மற்றும் அவரது நண்பரான, ஓசூர் வசந்த் நகரை சேர்ந்த பிரேம் (22) ஆகியோர் அணைக்கு வந்தனர்.
அப்போது செல்பி எடுக்கும் போது, தேவேந்திரா மற்றும் அவரது நண்பர் ஒருவரும், நிலைதடுமாறி தண்ணீரில் விழுந்தனர். இதை பார்த்த கேசவன், அவர்களை காப்பாற்ற அணையின் தண்ணீரில் இறங்கினார். இதில் ஒருவர் கரை வந்த நிலையில் தேவேந்திராவும், அவரை காப்பாற்ற சென்ற கேசவனும் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். இது குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் அட்கோ போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அதேபோல ஓசூர் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தேவேந்திரா, கேசவன் ஆகிய 2 பேரின் உடல்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதையடுத்து அட்கோ போலீசார் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கெலவரப்பள்ளி அணையில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story