கல்லூரி மாணவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு


கல்லூரி மாணவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 2 Sept 2018 4:00 AM IST (Updated: 2 Sept 2018 3:26 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவரை குத்தி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மும்பை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

மும்பை, 

கல்லூரி மாணவரை குத்தி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மும்பை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

மாணவர் குத்தி கொலை

மும்பை பாந்திராவை சேர்ந்தவர் ருசாப் (வயது19). கல்லூரி மாணவர். இவர் கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந் தேதி இரவு காதலியுடன் பாந்திரா ரெக்குலமேஷன் பகுதியில் பேசி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி ருசாப்பிடம் பணம் பறிக்க முயன்றனர். ஆனால் அவர் தன்னிடம் இருந்த மணிபர்சை கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பலினர் கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி அவரிடம் இருந்த பணத்தை பறித்தனர். மேலும் அவரது காதலியை கத்தியால் தாக்கி அவரிடம் இருந்த பணத்தையும் பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்தநிலையில் அந்த வழியாக வந்தவர்கள் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் கல்லூரி மாணவர் ருசாப் சிகிச்சை பலனின்றி பலியானார். அவரது காதலி சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார்.

ஆயுள் தண்டனை

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சமீர் சேக் (30) என்பவர் உள்ளிட்ட 2 பேரை கைது செய்த னர். வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையில், சமீர் சேக் மீதான கொலை, கொள்ளை குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப் பட்டது.

இதையடுத்து தீர்ப்பு கூறிய கோர்ட்டு சமீர் சேக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தர விட்டது. மற்ற ஒருவரை கோர்ட்டு விடுதலை செய்தது.

Next Story