கல்லூரிகளில் பகவத் கீதை வினியோகம் செய்வதில் எந்த தவறும் இல்லை மந்திரி வினோத் தாவ்டே சொல்கிறார்
கல்லூரிகளில் பகவத் கீதை வினியோகம் செய்வதில் எந்த தவறும் இல்லை என கல்வி மந்திரி வினோத் தாவ்டே தெரிவித்தார்.
மும்பை,
கல்லூரிகளில் பகவத் கீதை வினியோகம் செய்வதில் எந்த தவறும் இல்லை என கல்வி மந்திரி வினோத் தாவ்டே தெரிவித்தார்.
மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மராட்டிய கல்வி மந்திரி வினோத் தாவ்டே கலந்து கொண்டு பேசியதாவது:-
வாழ்க்கை பாடம்
தற்போதைய சூழ்நிலையில் யாராவது கல்வி நிறுவனங்களில் பகவத் கீதையை வினியோகம் செய்தால், அது கல்வி நிறுவனத்தில் மதவாதத்தை பரப்ப பா.ஜனதா செய்யும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
பகவத் கீதையை வினியோகிப்பது மதவாத நடவடிக்கை என்ற மனநிலையில் இருந்து நாம் எப்போது வெளிவர போகிறோம்? ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் கூட தன் வாழ்க்கையில் கற்றுக்கொள்ளவேண்டிய பல்வேறு பாடங்கள் கீதையில் உள்ளன.
தவறு இல்லை
கீதை, வேதம் போன்றவை ஒரு மதத்தை சார்த்த புத்தகங்கள் இல்லை. தத்துவங்கள் மற்றும் விஞ்ஞான ரீதியான பல்வேறு கருத்துகளை கொண்ட இந்த புத்தகங்கள் கோவிலுக்குள் முடங்கிவிட கூடாது. வாழ்க்கை பாதையை அறிந்துகொள்ள சாதாரண மனிதர்களுக்கும் இது கிடைக்கவேண்டும்.
எனவே பகவத் கீதையை கல்லூரிகளில் வினியோகித்ததில் எந்த தவறும் இல்லை.
மற்ற மதத்தை சார்ந்த புத்தகங்களும் கல்லூரிகளில் வினியோகிக்க படுகின்றன. ஆனால் பகவத் கீதை மட்டும் ஊடகங்களால் மத நடவடிக்கை போல பூதாகரமாக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story