ஆபாச படங்களை பரப்பி விடுவேன் என மிரட்டி இளம்பெண்களிடம் பணம் பறித்து வந்த வாலிபர் கைது


ஆபாச படங்களை பரப்பி விடுவேன் என மிரட்டி இளம்பெண்களிடம் பணம் பறித்து வந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 Sept 2018 3:45 AM IST (Updated: 2 Sept 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

ஆபாச படங்களை பரப்பி விடுவேன் என மிரட்டி இளம்பெண்களிடம் பணம் பறித்து வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தானே, 

ஆபாச படங்களை பரப்பி விடுவேன் என மிரட்டி இளம்பெண்களிடம் பணம் பறித்து வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கல்லூரி மாணவி

தானேயை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவிக்கு சமீபத்தில் நைகாவ் பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர் அறிமுகம் ஆனார். பின்னர் 2 பேரும் நட்பாக பழகி வந்தனர். இந்தநிலையில் ஒருநாள் அந்த வாலிபர் கல்லூரி மாணவியை காதலிப்பதாக கூறினார். காதலை ஏற்கவில்லையென் றால் தற்கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். இதனால் மாணவி அவரது காதல் வலையில் விழுந்தார். இதையடுத்து 2 பேரும் நெருக்கமாக பழகி வந்தனர்.

இந்தநிலையில் வாலிபர் கல்லூரி மாணவியிடம் ஆபாச படங்களையும் கேட்டுள்ளார். அவரும் காதலன் தானே கேட்கிறார் என அவரது ஆபாச படங்களை அனுப்பி உள்ளார்.

பணம் கேட்டு மிரட்டல்

அதன் பிறகுதான் மாணவிக்கு அந்த வாலிபரின் சுயரூபம் தெரிந்தது. வாலிபர் மாணவியிடம் பணம் கேட்டு தொல்லை கொடுக்க தொடங்கினார். பணம் கொடுக்கவில்லையென்றால் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பரப்பிவிடு வேன் என அவர் மாணவியை மிரட்டினார். இதனால் பயந்து போன மாணவி முதலில் சில ஆயிரங்களை அவருக்கு கொடுத்தார்.

இந்தநிலையில் திடீரென அந்த வாலிபர் மிகப்பெரிய தொகையை கேட்டார். மாணவியால் அந்த பணத்தை கொடுக்க முடியவில்லை. பயந்துபோன மாணவி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் முடங்கினார்.

பல இளம்பெண்களின் ஆபாச படம்

மாணவியின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை கவனித்து பெற்றோர் இதுகுறித்து அவரிடம் துருவி துருவி விசாரித்தனா். அப்போது அவர் தனக்கு நடந்த அவலம் குறித்து கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியிடம் பணம் பறித்து வந்த வாலிபரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அவரது செல்போனில் நடத்தப்பட்ட சோதனையில், மேலும் பல இளம் பெண்களின் ஆபாச படங்கள் இருந்தன. விசாரணையில், அவர் இளம்பெண்களை முதலில் காதல் வலையில் சிக்க வைத்து அவர்களிடம் இருந்து ஆபாச படத்தை பெற்று கொள்வார். பின்னர் அதை வைத்து மிரட்டி அவர்களிடம் பணம் பறித்து வந்தது தெரியவந்தது.

Next Story