இளம்பெண்ணை கற்பழித்த ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு ஜெயில் தானே கோர்ட்டு தீர்ப்பு
இளம்பெண்ணை கற்பழித்த ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தானே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
தானே,
இளம்பெண்ணை கற்பழித்த ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தானே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
இளம்பெண் கற்பழிப்பு
ஜார்கண்டை சேர்ந்தவர் சீத்தாராம் (வயது46). இவர் நவிமும்பை சான்பாடா பகுதியில் தங்கியிருந்து ஆட்டோ ஓட்டி வந்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணம் கொடுத்து சாப்பிடுவது வழக்கம். சம்பவத்தன்றும் ஆட்டோ டிரைவர் அந்த வீட்டிற்கு சாப்பிட சென்றார். அப்போது அங்கு உணவு கொடுப்பவரின் 17 வயது மகள் மட்டும் தனியாக இருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட ஆட்டோ டிரைவர் அந்த இளம்பெண்ணை கற்பழித்தார். மேலும் இதுபற்றி வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார்.
10 ஆண்டு ஜெயில்
இந்தநிலையில் இளம்பெண் கர்ப்பம் ஆனார். இதையடுத்து தனக்கு நடந்த அவலம் குறித்து பெற்றோரிடம் அவர் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஆட்டோ டிரைவர் மீது போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை தானே செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில் இளம்பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
Related Tags :
Next Story