சென்னை சேலையூரில் அரசு ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு
சேலையூரில், அரசு ஊழியர் வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு போனது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த சேலையூர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் பிரபு (வயது 54). இவருடைய மனைவி மைதிலி. கணவன்–மனைவி இருவரும் அரசு அலுவலகத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ஒருவருக்கு திருமணம் ஆகி தனியாக வசித்துவருகிறார். இளைய மகன் மாடம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கணவன்–மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். அவர்களது மகன் பள்ளிக்கு சென்றுவிட்டார்.
வேலை முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்த அவர்கள், படுக்கை அறையில் உள்ள பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 20 பவுன் நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சேலையூர் போலீசில் பிரபு புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வீட்டின் பூட்டு, பீரோ கதவு உடைக்கப்படாமல் நகைகள் மாயமாகி இருப்பதால் அடிக்கடி அவர்களது வீட்டுக்கு வந்துசெல்லும் நன்கு தெரிந்த நபர்கள்தான் அவற்றை திருடிச்சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுபற்றி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story