கல்குவாரியில் தேங்கி கிடந்த நீரில் மூழ்கி தொழிலாளி பலி


கல்குவாரியில் தேங்கி கிடந்த நீரில் மூழ்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 3 Sept 2018 4:15 AM IST (Updated: 3 Sept 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

வையம்பட்டி அருகே கல்குவாரியில் தேங்கி கிடந்த நீரில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

வையம்பட்டி,

திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த குமாரவாடியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி(வயது 40). தச்சுத்தொழிலாளியான இவர் நேற்று மதியம் வண்ணான்பாறை என்ற இடத்தில் உள்ள கல்குவாரியில் தேங்கி கிடந்த தண்ணீரில் குளிப்பதற்காக சென்றார். முதலில் துணிகளை துவைத்துவிட்டு, குளிப்பதற்காக நீரில் இறங்கினார்.

அப்போது, அவர் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரி கிறது. நீச்சல் தெரியாத அவர் தண்ணீரில் தத்தளித்தவாறு, காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆதற்குள் அவர் நீரிழ் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள், இது பற்றி மணப்பாறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் ஆரோக்கியசாமியை பிணமாக மீட்டனர். பின்னர் வையம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆரோக்கியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், குமாரவாடி ஊராட்சியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கல்குவாரியில் தேங்கி கிடக்கும் தண்ணீரை பயன்படுத்த வேண்டியுள்ளது. தண்ணீர் இல்லாத காரணத்தால் ஆரோக்கியசாமி கல்குவாரியில் தேங்கிய தண்ணீரில் குளித்துள்ளார். இதனால் தான் அவர் உயிரிழந்துள்ளார். எனவே குமாரவாடி ஊராட்சியில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Next Story