மாவட்ட செய்திகள்

கரூருக்கு 7-ந் தேதி தமிழக கவர்னர் வருகை பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறுகிறார் + "||" + Karur arrives at the 7th Governor's Cabinet meeting to receive public requests from the public

கரூருக்கு 7-ந் தேதி தமிழக கவர்னர் வருகை பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறுகிறார்

கரூருக்கு 7-ந் தேதி தமிழக கவர்னர் வருகை பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறுகிறார்
கரூருக்கு வருகிற 7-ந் தேதி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகை தந்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.
கரூர்,

சென்னையில் இருந்து புறப்பட்டு வருகிற 7-ந் தேதி மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கரூர் ரெயில் நிலையத்திற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்று கரூர் அருகே தரகம்பட்டி பகுதியிலுள்ள இன்ப சேவா சங்கம் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பின் 50-வது ஆண்டு பொன் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகிறார்.


அன்று மதியம் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அவர் தங்கி ஓய்வெடுக்கிறார். அதன் பின்னர் பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரிடமிருந்து கோரிக்கை மனுக்களை தமிழக கவர்னர் பெறுகிறார். அன்றைய தினம் மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மனுக்களை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

கவர்னர் வருகையையொட்டி கரூர் மாவட்ட போலீஸ் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.