புதர் மண்டி காணப்படும் பஸ் நிறுத்தத்தை சீரமைக்க வேண்டும்


புதர் மண்டி காணப்படும் பஸ் நிறுத்தத்தை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 3 Sept 2018 3:15 AM IST (Updated: 3 Sept 2018 2:30 AM IST)
t-max-icont-min-icon

திருப்பாச்சூரில் புதர் மண்டி காணப்படும் பஸ் நிறுத்தத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தில் திருவள்ளூர்- கடம்பத்தூர் சாலையில் பயணிகளின் வசதிக்காக பஸ் நிறுத்தம் உள்ளது. பயணிகளின் வசதிக்காக நிழற்குடையும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பஸ் நிறுத்தமானது கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பயணிகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு செடிகள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் இந்த பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற்குடையில் அமர முடியாமல் அவதியுறுகின்றனர்.

எனவே திருப்பாச்சூரில் புதர்மண்டி காணப்படும் பஸ் நிறுத்தத்தை அதிகாரிகள் இனிமேலும் காலதாமதம் செய்யாமல் விரைந்து சீரமைத்து தரவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story