தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கிய கடை உரிமையாளர் கைது
திண்டுக்கல்லில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கிய கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் ஆர்.எம். காலனி 5–வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 41). இவர் திண்டுக்கல் பஸ்நிலையத்தில் கடை நடத்தி வருகிறார். இதற்கிடையே, அவருடைய வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், தனிப்படை போலீசார் சரவணின் வீட்டுக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, வீட்டில் இருந்த சரவணனை போலீசார் கைது செய்தனர். மேலும், புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அவரை நகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். அங்கு சரவணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, நேற்று கோர்ட்டு விடுமுறை என்பதால் அவரை முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு முருகனின் வீட்டுக்கு அழைத்து சென்று அவர் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிமன்ற காவலில் திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.