கோவைக்கு கடத்தப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் 4 பேர் கைது


கோவைக்கு கடத்தப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் 4 பேர் கைது
x
தினத்தந்தி 3 Sept 2018 3:45 AM IST (Updated: 3 Sept 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து கோவைக்கு லாரியில் கடத்தப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தொப்பூரில் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.

நல்லம்பள்ளி,

பெங்களூருவில் இருந்து கோவைக்கு தர்மபுரி மாவட்டம் தொப்பூர் வழியாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை லாரியில் கடத்தி செல்வதாக தொப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தொப்பூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அதில் 50 பெட்டிகளில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததும், பெங்களூருவில் இருந்து கோவைக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து லாரியுடன் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவை அலுமின்காலனியை சேர்ந்த டிரைவர் மன்சூர் அலி (வயது 33), மரக்கடையை சேர்ந்த முகமது அலி (36), அப்பாஸ் (35), உக்கடத்தை சேர்ந்த முகமது ஹரிப் (28) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story