தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவிலில் சதசண்டி மகா யாகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவிலில் சதசண்டி மகா யாகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 3 Sept 2018 4:00 AM IST (Updated: 3 Sept 2018 3:32 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவிலில் சதசண்டி மகா யாகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி,

திருச்சி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவிலில் மாந்தி சான்நித்யம், யுந்திர சான்நித்யம், மூர்த்தி சான்நித்யம் வேண்டியும், உலக நலன் கருதியும் சத சண்டி மகா யாகம் கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து காலை மற்றும் மாலை நேரங்களில் யாகம் நடந்து வந்தது.

இந்த நிலையில் யாகத்தின் முக்கிய நிகழ்வாக 4-ம் கால சண்டி ஹோமம் நேற்று காலை 8 மணி முதல் நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அம்மன் முன்பு யாகம் நடைபெற்றது. பெரிய குண்டத்தில் பழ வகைகள், சந்தன கட்டை, ஹோம பொருட்கள், திரவியங்கள், பட்டு புடவைகள், பூக்கள் உள்ளிட்டவை இடப்பட்டு யாகம் நடந்தது. மேலும் கோ பூஜை, சுமங்கலி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.

இந்த சிறப்பு யாகத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மதியம் 1.30 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலை 6.30 மணிக்கு மேல் அம்மன் புறப்பட்டு கோவில் உள் வீதியில் வலம் வந்தார். சதசண்டி யாகம் நேற்றுடன் முடிவடைந்தது. யாகத்திற்கான ஏற்பாடுகளை தெய்வீக மகாசபையினர் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Next Story