மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் இணையதளங்களை மேம்படுத்த வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில், இணையதளங்களை மேம்படுத்த வேண்டும் என்று அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில், இணையதளங்களை மேம்படுத்த வேண்டும் என்று அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பொதுநலன் வழக்கு
அரசின் முக்கிய துறைகளுக்கான விண்ணப்பங்கள், சான்றிதழ்கள் போன்றவை தற்போது இணையம் மூலமாக எளிதாக கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக இணையதளங்கள் தொடங்கப்பட்டு மக்களின் வேலைகள் எளிதாக்கப்படுகின்றன.
இந்த நிலையில் இணையதளங்களை மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்கவேண்டும் என்று மும்ைப ஐகோர்ட்டில் பொது நலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் ‘‘மாற்று திறனாளிகளுக்கு சம உரிமை அளிக்கும் வகையில், மத்திய அரசு 2009-ம் ஆண்டு விதித்த வழிகாட்டு நெறிமுறைகளை, மராட்டிய இணையதளங்கள் பின்பற்றுவதை உறுதி செய்யவேண்டும் என்றும்’’ கூறப்பட்டு இருந்தது.
நீதிபதி உத்தரவு
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி நரேஷ் பாட்டில் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “ மாநில அரசு இணையதளங்களை மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் 3 மாதத்திற்குள் மேம்படுத்தவேண்டும். தங்கள் அனைத்து இணையதளங்களும் மத்திய அரசின் நெறிமுறைகள் படி உள்ளது என்பதை உறுதி படுத்தவேண்டும்.
மேலும் இணையதளம் குறித்த மத்திய அரசின் வழிகாட்டுதல் பின்பற்றப்படுகிறது என்பது குறித்து தேசிய தகவல் தொழில்நுட்ப மையத்தில் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கவேண்டும்’’ என்றார்.
Related Tags :
Next Story