மத்திய அரசு நிறுவனத்தில் வேலை
இந்திய தொழில்கொள்கை மற்றும் மேம்பாட்டு அமைப்பில் காப்புரிமை மற்றும் வடிவமைப்பு தேர்வாளர் பணிக்கு 220 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இந்திய தொழில்கொள்கை மற்றும் மேம்பாட்டு அமைப்பு செயல்படுகிறது. தற்போது இந்த அமைப்பில் காப்புரிமை மற்றும் வடிவமைப்பு தேர்வாளர் பணிக்கு 220 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பயோகெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி, பாலிமர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், பயோ மெடிக்கல் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேசன், மெட்டலர்ஜிக்கல் என்ஜினீயரிங் போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 112 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 59 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 33 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 16 இடங்களும் உள்ளன.
பணியிடங்கள் உள்ள பிரிவு சார்ந்த பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சில பிரிவுகளில் பட்டப்படிப்பு படித்தவர்களும் சேர்க்கப்படுகிறார்கள். விண்ணப்பதாரர் 21 முதல் 35 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசிநாள் 4-9-2018-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.cgpdtmrecruitment.in. என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story