இந்திய அரசியலமைப்பு
ஆங்கிலேய ஆட்சியில் மாநிலங்களில் இரு அவை கொண்ட சட்டசபையை உருவாக்க மான்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் 1919-ல் கொண்டுவரப்பட்டது. இது மாநில இரட்டை ஆட்சி முறையை அங்கீகரித்தது.
அதிகாரம் மிக்க துறைகளுக்கு ஆங்கிலேய அமைச்சர்களும், குறைந்த அதிகாரம் உள்ள துறைகளுக்கு இந்திய அமைச்சர்களும் நியமிக்கப்பட்டார்கள். இதற்கு எதிர்ப்பு அதிகமிருந்த நிலையில் எதிர்பார்த்த பலனும் கிடைக்கவில்லை. எனவே இதற்கு தீர்வு காண 1927-ல் சைமன் கமிஷன் உருவாக்கப்பட்டது. இதில் இந்திய உறுப்பினர்கள் இல்லாததால், அதையும் இந்தியா புறக்கணித்தது. அப்போது இந்தியர்களுக்கு அரசியலமைப்பு எழுதும் ஆற்றல் இல்லை என்று லார்டு பிர்ஹவுன்ட் கூறினார். இதற்காக 1928-ல் மோதிலால்நேரு ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து கேட்கப்பட்டது. இது ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு கீழ்ப்பட்ட ஆட்சி முறையாகும்.
ஜவகர்லால் நேரு, நேதாஜி போன்றவர்கள் முழு விடுதலை கோரலாம் என்றனர். காந்திஜியின் யோசனைப்படி முழுவிடுதலை தீர்மானம் 1929-ல் லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவுக்கு ஆட்சி அதிகாரம் வழங்குவதற்காக லண்டனில் வட்டமேஜை மாநாடுகள் நடைபெற்றன. 3 வட்டமேைஜ மாநாடுகளிலும் இந்திய தலைவர் டாக்டர் அம்பேத்கர் கலந்து கொண்டார். 1935-ம் ஆண்டு சட்டப்படி மாநிலங்களில் சுயாட்சியும், மத்தியில் இரட்டை ஆட்சியும் ஏற்பட்டது. 1939-ல் இரண்டாம் உலகப்போர் ஆரம்பமானதால், 1940-ல் ஆகஸ்டு அறிக்கை வெளியிடப்பட்டு உலகப் போருக்குப் பின் இந்தியாவுக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 1946-ல் இந்திய அமைச்சரவை தூதுக்குழுவும், அரசியல் நிர்ணயசபையும் உருவாக்கப்பட்டது.
இந்திய விடுதலைச் சட்டம் 1947 ஜூலை 1-ல் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டது. அரசியல் நிர்ணயசபை நிரந்தர தலைவராக ராஜேந்திர பிரசாத்தும், அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு தலைவராக டாக்டர் அம்பேத்கரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரசியலமைப்புச்சட்டம் 1948-ல் தயாரானது. 1949 நவம்பர் 26 அன்று இந்த சட்டம் ஏற்கப்பட்டது. இது இந்திய சட்டதினமாகும். இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950 ஜனவரி 16 முதல் செயல்படுத்தப்படுகிறது. அது செயல்படுத்தப்பட்ட நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. குடியரசான பிறகு அரசியலமைப்பு சபை நாடாளுமன்றமாக மாறியது. அதன் தலைவர் குடியரசுத் தலைவரானார்.
Related Tags :
Next Story