மாவட்டம் முழுவதும் ஒரேமாதிரியான ஊதியம் வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் களப்பணியாளர்கள் மனு


மாவட்டம் முழுவதும் ஒரேமாதிரியான ஊதியம் வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் களப்பணியாளர்கள் மனு
x
தினத்தந்தி 3 Sep 2018 10:30 PM GMT (Updated: 3 Sep 2018 8:13 PM GMT)

மாவட்டம் முழுவதும் ஒரேமாதிரியான ஊதியம் வழங்க வேண்டும் என்று மஸ்தூர் களப்பணியாளர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி,

தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதாரத்துறை டெங்கு மஸ்தூர் களப்பணியாளர்கள் சார்பில் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். இதில் கூறியிருப்பதாவது:-

டெங்கு மஸ்தூர் களப்பணியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து பணி வழங்கிட வேண்டும். பணியின் போது அடையாள அட்டை வழங்கிட வேண்டும். ரூ. 231 என இருக்கும் குறைந்தபட்ச ஊதிய முரண்பாடுகள் களையப்பட்டு, ரூ. 500 ஆக மாவட்டம் முழுவதும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கிட வேண்டும்.

பணியின் போது சமூக விரோதிகளால் ஏற்படும் இன்னல்களை போக்கிடும் வகையில் பாதுகாப்பு வழங்கிட வேண்டும். பணியின் போது பழைய களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும். மஸ்தூர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை 5 மாதம் வரை காலம் தாழ்த்தாமல், உடனுக்குடன் வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story