மாவட்ட செய்திகள்

திருமணமாகி 2 மாதங்களே ஆன நிலையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை + "||" + The woman committed suicide by hanging herself for 2 months

திருமணமாகி 2 மாதங்களே ஆன நிலையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

திருமணமாகி 2 மாதங்களே ஆன நிலையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
திருமணமாகி 2 மாதங்களே ஆன நிலையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது பற்றி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
மணல்மேடு,

நாகை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள தலைஞாயிறு காட்டுத்தெருவை சேர்ந்தவர் பாபுராஜ் மகன் ராஜ்குமார் (வயது35). தொழிலாளி. இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை அருகே உள்ள ராதாநல்லூரை சேர்ந்த குழந்தைவேலுவின் மகள் ரம்யா (27) என்பவருடன் திருமணம் நடந்தது.


ரம்யா கணவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாதபோது ரம்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ரம்யாவின் தந்தை குழந்தைவேலு மணல்மேடு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) டெல்லிபாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

ரம்யாவுக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆவதால் அவருடைய சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது பற்றி உதவி கலெக்டர் தேன்மொழி, ரம்யாவின் கணவர் ராஜ்குமார், ராஜ்குமாரின் தந்தை பாபுராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘கஜா’ புயலில் வாழைகள் சேதம்: ரெயில் முன் பாய்ந்து விவசாயி தற்கொலை திருச்சியில் சோகம்
திருச்சியில் ‘கஜா‘ புயலால் வாழைகள் சேதமடைந்த வேதனையில், விவசாயி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
2. பூதப்பாண்டி அருகே மாடியில் இருந்து விழுந்த பெண் சாவு
பூதப்பாண்டி அருகே மாடியில் இருந்து விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
3. திருவாரூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி
திருவாரூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி.
4. கடனை திருப்பி செலுத்தும்படி நிதி நிறுவன ஊழியர்கள் நெருக்கடியால் முந்திரி வியாபாரி தற்கொலை
நிதி நிறுவன ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததால் முந்திரி வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன் அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
5. திருவெறும்பூர் அருகே பாய்லர் ஆலை பயிற்சி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவெறும்பூர் அருகே பாய்லர் ஆலை பயிற்சி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு சம்பவத்தில் விடுதியில் ஷாம்பு குடித்து தற்கொலைக்கு முயன்ற பயிற்சி மாணவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.