சேலம்: கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாப சாவு
சேலத்தில் கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
சூரமங்கலம்,
சேலம் ஜாகீர்அம்மாபாளையம் சாஸ்திரிநகர் பகுதியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவருடைய மகன் கவுசீகன் (வயது 15). அதே பகுதியை சேர்ந்த ரவி மகன் மாரிமுத்து (16). இவர்கள் 2 பேரும் ஜங்சன் சுப்பிரமணியன் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். நண்பர்களான மாரிமுத்து, கவுசீகன் ஆகியோர் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் காலையில் விளையாடுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றனர். இதனிடையே இரவு நீண்ட நேரமாகியும் தங்களது மகன்கள் வராததால் கவுசீகன், மாரிமுத்து பெற்றோர்கள் பதறினர். பின்னர் அவர்கள் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனால் அவர்களை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை வெண்ணங்குடி முனியப்பன் கோவில் அருகே உள்ள கல்குவாரி குட்டையில் 2 சிறுவர்களின் உடல்கள் பிணமாக மிதந்தன. அங்கு வந்த தொழிலாளர்கள் இதைப்பார்த்து, சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, குட்டையில் மூழ்கி பலியானவர்களின் உடலை மீட்டனர். பின்னர் அவர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் குட்டையில் மூழ்கி இறந்தவர்கள் மாயமான கவுசீகன், மாரிமுத்து என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் 2 பேரும் தங்களது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து வீட்டில் விளையாட செல்வதாக கூறிவிட்டு கல்குவாரி குட்டையில் உள்ள தண்ணீரில் குளிக்க சென்றுள்ளனர்.
இந்த குட்டையில் கவுசீகன், மாரிமுத்து மற்றும் அவர்களின் நண்பர்கள் 3 பேர் என மொத்தம் 5 பேரும் இறங்கி குளித்தனர். அப்போது கவுசீகனும், மாரிமுத்துவும் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்று குளிக்க முயன்றனர். அவர்களுடன் சென்ற நண்பர்கள் 3 பேரும் உங்களுக்கு நீச்சல் தெரியாது என்பதால் அந்த பகுதிக்கு போக வேண்டாம் என சத்தம் போட்டுள்ளனர். இதை பொருட்படுத்தாமல் அவர்கள் 2 பேரும் ஆழமான பகுதிக்கு சென்றனர்.
இதையடுத்து சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி கவுசீகனும், மாரிமுத்துவும் இறந்து விட்டனர். அவர்களுடைய நண்பர்கள் பயத்தில் அங்கிருந்து வெளியேறி வீட்டிற்கு ஓடிவிட்டனர். மாணவர்கள் குட்டையில் மூழ்கி இறந்தது குறித்து அவர்கள் பயத்தில் வீட்டில் தெரிவிக்கவில்லை என போலீசார் கூறினார்கள். இதனிடையே மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். இதையடுத்து அவர்கள் மாணவர்களின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களின் கண்களை கலங்க செய்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story