மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 39 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் ரோகிணி வழங்கினார்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 39 பேருக்கு ரூ.1.98 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரோகிணி வழங்கினார்.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். இதில் ஆனையம்பட்டி புதூர் பகுதி மக்கள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் சுவேதா நதியின் குறுக்கே எங்கள் பகுதி அருகே பாலம் கட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த பாலம் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக கூறப்படு கிறது.
எனவே ஆனையம்பட்டி புதூர் பகுதியிலேயே ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்று கூறி உள்ளனர். இதே போன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் பலர், சேலம் கிச்சிபாளையம் காந்திநகர் பகுதியில் சுடுகாடு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். இதே போன்று தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் பலர் சேர்ந்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். 60 வயது நிறைந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இதே போன்று பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை என மொத்தம் 513 மனுக்களை பெற்றார்.
பின்னர் மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் 30 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1½ லட்சத்தில் விலையில்லா நவீன காதொலி கருவி, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தையல் எந்திரம் ஆகியவற்றை வழங்கினார். அதே போன்று 3 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை உள்ளிட்ட மொத்தம் 39 பயனாளிகளுக்கு ரூ.1.98 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Related Tags :
Next Story