கன்னட படங்களில் வலம் வரும் 71 ஆண்டுகள் பழமையான கார்


கன்னட படங்களில் வலம் வரும் 71 ஆண்டுகள் பழமையான கார்
x
தினத்தந்தி 4 Sept 2018 5:14 AM IST (Updated: 4 Sept 2018 5:14 AM IST)
t-max-icont-min-icon

ஒரு நாளுக்கு 6 கிலோ மீட்டர் மட்டுமே இயக்க முடியும் கன்னட படங்களில் வலம் வரும் 71 ஆண்டுகள் பழமையான கார் படப்பிடிப்பு வாடகையாக ரூ.1 லட்சம் வாங்கும் மருந்துக்கடை உரிமையாளர்.

மண்டியா,

இ்ன்றைய நவீன உலகில் எத்தனையோ புதிய வடிவிலான பொருட்கள் வந்தாலும் பழங்கால பொருட்களின் மதிப்பும் குறைவதில்லை. வைரத்தை பட்டை தீட்ட தீட்ட ஜொலிப்பது போல், பழங்கால பொருட்களும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் தனிமவுசுடன் திகழ்கிறது.

இதற்கு சிறந்த உதாரணமாக மண்பானையை கூறலாம். சுள் என சுட்டெரிக்கும் கோடை காலத்தில் குளிர்ந்த நீரை குடிக்க மண்பானை பயன்பாடு இன்றளவும் உள்ளது. இந்த மண்பானையை ஏழைகளின் குளிர்பதனபெட்டி என்று அழைக்கப்படுகிறது. மண்பானை போல் பழங்கால நாணயங்கள், பழங்கால ஓவியங்கள், பழங்கால கார்களும் தற்போதும் மக்களிடம் நன்மதிப்பை பெற்று விளங்குகிறது.

அந்த வகையில் 1947-ம் ஆண்டு தயாரிக்்கப்பட்ட வின்டேஜ் கார் மண்டியா மாவட்டம் மட்டுமல்ல கர்நாடக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த கார் கன்னட படங்களிலும் வலம் வருகிறது. இந்த கார் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவை சேர்ந்த மருந்துக்கடை உரிமையாளரிடம் உள்ளது.

இந்த வின்டேஜ் கார் மட்டுமல்ல மேலும் பல பழங்கால கார்களுக்கும் அவர் சொந்தக்காரர் ஆவார். 1947-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட வின்டேஜ் கார் கன்னட திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஒரு நாள் வாடகை ரூ.1 லட்சம். இந்த காரை ஒரு நாளுக்கு 6 கிலோ மீட்டர் மட்டுமே இயக்க முடியும் என்பது கூடுதல் தகவல். தற்போது 71 ஆண்டுகள் பழமையான இந்த கார் பொதுமக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டதால், தினமும் ஏராளமானோர் அந்த காருடன் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள். புதுசு புதுசா நவீன சாதனங்கள் வந்தாலும் பழங்கால பொருட்களுக்கு தனி மவுசு தான் என்றால் மிகையல்ல.

Next Story