திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை


திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 5 Sept 2018 4:00 AM IST (Updated: 5 Sept 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று இருளர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் இரா.பிரபு தலைமையில் திரளான பொதுமக்கள் முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

திருவள்ளூர்,

நாங்கள் சென்னீர்குப்பம், திருப்பாச்சூர், இருளஞ்சேரி, தொழுதவாக்கம், பேரம்பாக்கம், ஊத்துக்கோட்டை, சென்றாயன்பாளையம் போன்ற பகுதிகளில் காலம் காலமாக குடும்பத்துடன் வசித்து வருகிறோம்.

எங்களுக்கு பட்டா மற்றும் மாற்று இடம் வழங்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எங்களுக்கு இதுநாள் வரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே பட்டா மற்றும் மாற்று இடம் வழங்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட அவர் அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story