மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தை சேர்ந்த 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது + "||" + Dr. Radhakrishnan Award for 13 Teachers from Coimbatore

கோவை மாவட்டத்தை சேர்ந்த 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

கோவை மாவட்டத்தை சேர்ந்த 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது
கோவை மாவட்டத்தை சேர்ந்த 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்.
கோவை,

ஆசிரியராக இருந்து நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 5-ந் தேதி(இன்று) ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாணவர் சேர்க்கை, புதுமை கற்பித்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல்வேறு வகையில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது தமிழக அரசு சார்பில் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.


இந்த விருதுக்கு கோவை மாவட்டத்தில் 13 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மேலும் பள்ளியின் கட்டமைப்பு, கற்றல் திறனை மேம்படுத்துதல் உள்ளிட்டவைகளின் மூலம் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு தூய்மைப்பள்ளி விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு மேட்டுப்பாளையத்தில் உள்ள ஸ்ரீசரஸ்வதி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இதுதவிர கடந்த கல்வி ஆண்டில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முதல் முறையாக காமராஜர் விருதும் வழங்கப்படுவதாக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி கோவை மாவட்டத்தில் இந்த விருதை பெறுவதற்காக 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்குகிறார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ள ஆசிரியர்களின் விவரம் வருமாறு:-

1. தேவராஜன், தலைமை ஆசிரியர், அரசு பள்ளி, சேரிபாளையம்.

2. சாந்தாமணி, தலைமை ஆசிரியை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அன்னூர்.

3. ஆனந்தி, பட்டதாரி ஆசிரியை, எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம், கோவை.

4. ஈஸ்வரன், ஓவிய ஆசிரியர், எஸ்.சி.எம். மேல்நிலைப்பள்ளி, வதம்பச்சேரி, பொள்ளாச்சி.

5. பாலன், தலைமை ஆசிரியர், அரசு பள்ளி, குரும்பபாளையம்.

6. வனஜா, தலைமை ஆசிரியை, அரசு உயர்நிலைப்பள்ளி, நரசிம்மநாயக்கன்பாளையம்.

7. ஜெயலட்சுமி, தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எட்டிமடை.

8. சுப்ரமணியன், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஓடக்கல்பாளையம், சுல்தான்பேட்டை.

9.அமலோற்பவமேரி, தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, குரும்பபாளையம்.

10. திருமூர்த்தி, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பச்சாபாளையம்.

11. உத்தர்ராஜ், பட்டதாரி ஆசிரியர், ஆனைமலை ஒன்றியம், மஞ்சநாயக்கனூர்.

12. கண்ணன், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அம்பராம்பாளையம், பொள்ளாச்சி.

13. வேலுமணி, தலைமை ஆசிரியை, ஜி.ஆர்.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நீலாம்பூர். ஆகிய 13 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களை கல்வித்துறை அதிகாரிகள், சக ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் வாழ்த்தினர்.

தூய்மை பள்ளி விருதுக்கு மேட்டுப்பாளையம் ஸ்ரீசரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி தேர்வு செய்யப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. வங்கியில் இருந்து பணம் எடுத்து சென்ற ஆசிரியரிடம் ரூ.80 ஆயிரம் பறிப்பு - பட்டதாரி வாலிபர் கைது
வங்கியில் இருந்து பணம் எடுத்து சென்ற ஆசிரியரிடம் ரூ.80 ஆயிரத்தை பறித்துச்சென்ற பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2. கோவை உக்கடம், வடவள்ளி பகுதிகளில் மேம்பாலம்-குடிநீர் திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் நேரில் ஆய்வு
கோவை உக்கடம் மேம்பாலம், வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
3. கோவையில் 24 மணி நேரமும் மது விற்பனை படுஜோர்; நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி போலி மது தாராளம்
கோவையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி 24 மணி நேரமும் போலி மது விற்பனை செய்யப்படுகிறது.
4. பாகிஸ்தானில் பள்ளி கூடத்தில் கொடியேற்றிய 3 மாணவர்கள், ஆசிரியர் மின்சாரம் பாய்ந்து பலி
பாகிஸ்தானில் பள்ளி கூடம் ஒன்றில் இறை வணக்கத்தில் கொடியேற்றும்பொழுது மின்சாரம் பாய்ந்து 3 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் உயிரிழந்தனர்.
5. கோவையில் 18-ந் தேதி நடைபெறும் தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்க வேண்டும் மாநகர நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
கோவையில் வருகிற 18-ந் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று மாநகர தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.