கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாததை கண்டித்து திருவாரூரில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாததை கண்டித்து திருவாரூரில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Sep 2018 10:45 PM GMT (Updated: 4 Sep 2018 8:39 PM GMT)

கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாததை கண்டித்து பா.ம.க.வினர் திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

கர்நாடகாவில் கன மழை பெய்ததால், தமிழகத்துக்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை 4 முறை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் நம்பிக்கையுடன் சம்பா சாகுபடியை தொடங்கினர்.

இந்த நிலையில் ஆறு, வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாததால் கடைமடை பகுதியை தண்ணீர் சென்றடையவில்லை. இதை கண்டித்து பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் பாலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் அய்யப்பன் (வடக்கு), ஏ.சி.பாலு (தெற்கு), மாநில வன்னியர் சங்க துணைத்தலைவர் மனோகரன், மாநில இளைஞரணி துணை செயலாளர் நரசிம்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கடைமடை பகுதிக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story