திருச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7–ந் தேதி நடக்கிறது
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை மறுநாள்(7–ந் தேதி) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை மறுநாள்(7–ந் தேதி) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பல தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவன பணிடத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்கிறது.
முகாமில் 10–ம் வகுப்பு, 12–ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் 18 வயதுக்கு மேல் 35 வயதுவரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த நேர்காணல் தேர்வில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. முகாமில் பங்கேற்பவர்களுக்கு பயணப்படி ஏதும் வழங்கப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story