பெண்ணிடம் பணம் பறித்த போலி பெண் போலீஸ் கைது


பெண்ணிடம் பணம் பறித்த போலி பெண் போலீஸ் கைது
x
தினத்தந்தி 4 Sep 2018 11:21 PM GMT (Updated: 4 Sep 2018 11:21 PM GMT)

தானே மும்ராவை சேர்ந்த 20 வயது பெண்ணை சம்பவத்தன்று அபர்னா (வயது 32) என்ற பெண் சந்தித்து பேசினார். அப்போது தன்னை போலீஸ் என அறிமுகப்படுத்தி கொண்டார்.

தானே,

மும்ராவை சேர்ந்த அந்த பெண் மீது கல்யாண் போலீஸ் நிலையத்தில் திருட்டு, கடத்தல் வழக்கு இருப்பதாக கூறினார். மேலும் வழக்கு தொடர்பாக கைது செய்யாமல் இருக்க தனக்கு ரூ.7 லட்சம் தர வேண்டும் என மிரட்டினார். இதை கேட்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில், அந்த பெண் ரூ.1 லட்சம் மட்டும் தருவதாக கூறி முதல் கட்டமாக அபர்னாவிடம் ரூ.10 ஆயிரம் கொடுத்தார். பின்னர் பெண் போலீஸ் அபர்னாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அந்த பெண் இதுகுறித்து தானே போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் அபர்னா போலி பெண் போலீஸ் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நவிமும்பை, ஸ்ரீவானே பகுதியில் வைத்து போலி பெண் போலீஸ் அபர்னாவை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர். 

Next Story