மாவட்ட செய்திகள்

வியாபாரிகளுடன் குமாரசாமி காணொலிக்காட்சி மூலம் கலந்துரையாடல் + "||" + Kumaraswamy scene with merchants through video conferencing

வியாபாரிகளுடன் குமாரசாமி காணொலிக்காட்சி மூலம் கலந்துரையாடல்

வியாபாரிகளுடன் குமாரசாமி காணொலிக்காட்சி மூலம் கலந்துரையாடல்
யஷ்வந்தபுரம் தக்காளி மார்க்கெட் வியாபாரிகளுடன் குமாரசாமி காணொலிக்காட்சி மூலம் கலந்துரையாடல் நடத்தினார்.
பெங்களூரு,

வியாபாரிகளுக்காக தினசரி கடன் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று குமாரசாமி உறுதி அளித்தார்.

கர்நாடக கூட்டுறவுத்துறை மந்திரி பண்டப்பா காசம்பூர் நேற்று பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் தக்காளி மார்க்கெட்டுக்கு சென்று வியாபாரிகளின் குறைகளை கேட்டார். கந்துவட்டிக்கு தடை விதிக்கும் விதத்தில் ஏழைகளின் தோழன் என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அவர் கூறினார்.

அங்கிருந்த வியாபாரி களுடன் காணொலிக்காட்சி மூலம் முதல்-மந்திரி குமாரசாமி கலந்துரை யாடினார். அப்போது வியாபாரிகள் தங்களின் குறைகளை எடுத்துக் கூறினர். அதில் பேசிய குமாரசாமி, “தெருவோர வியாபாரிகளுக்கு உதவும் நோக்கத்தில் ஏழைகளின் தோழன் என்ற தினசரி கடன் திட்டத்தை செயல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது. கூட்டுறவு வங்கிகள் மூலம் இந்த தினசரி கடன் திட்டம் அமல்படுத்தப்படும்” என்றார்.

வியாபாரிகளின் பிரச்சினைகளை கேட்டு அறிந்து அவற்றை அறிக்கையாக தயாரித்து தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவிட்டார். இந்த கலந்துரையாடலுக்கு பிறகு மந்திரி பண்டப்பா காசம்பூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக அரசு ஏழைகளின் தோழன் என்ற பெயரில் தினசரி கடன் உதவி திட்டத்தை தொடங்குகிறது. இதன் மூலம் தெருவோர வியாபாரிகளுக்கு ஒரு நாள் கடன் வழங்கப்படும். காலையில் கடன் வழங்கி மாலையில் அந்த கடன் தொகை திரும்ப பெறப்படும். இதன் மூலம் கந்துவட்டி பிரச்சினை தடுக்கப்படும்.

இந்த திட்டத்திற்கான வரைவு அறிக்கையை தயாரித்துள்ளோம். வியாபாரிகளின் பிரச்சினைகள் என்ன என்பதை அறிய நான் இங்கு வந்தேன். வியாபாரிகளின் ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு பண்டப்பா காசம்பூர் கூறினார். 


தொடர்புடைய செய்திகள்

1. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு முயற்சி முதல்-மந்திரி பரபரப்பு குற்றச்சாட்டு
வருமானவரி மற்றும் அமலாக்கத்துறை மூலமாக கூட்டணி தலைவர்களுக்கு நெருக்கடி கொடுத்து ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு முயற்சிப்பதாக முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
2. குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் இன்று மந்திரிசபை கூட்டம்
முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் இன்று (வெள்ளிக்கிழமை) மந்திரிசபை கூட்டம் நடைபெறுகிறது.
3. முதல்-மந்திரி குமாரசாமியின் ஆடிட்டரின் வீடு, அலுவலகத்தில் வருமான வரி சோதனை
முதல்-மந்திரி குமாரசாமியின் கணக்கு விவரங்களை கையாளும் ஆடிட்டரின் வீடு, அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடந்துள்ளது.
4. மண்டியா அருகே வயலில் இறங்கி நாற்று நட்டார், குமாரசாமி
மண்டியா அருகே நெல் நாற்றுகளை நட்டு வைத்து முதல்-மந்திரி குமாரசாமி நேற்று விவசாய பணிகளை தொடங்கி வைத்தார்.
5. குமாரசாமியின் முதல்-மந்திரி பதவியேற்பு விழாவுக்கு ரூ.42 லட்சம் செலவு
7 நிமிடத்தில் நிறைவடைந்த குமாரசாமியின் முதல்-மந்திரி பதவியேற்பு விழாவுக்காக ரூ.42 லட்சம் செலவிடப்பட்டு உள்ளது.