மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் 11 பேருக்கு நல்லாசிரியர் விருது + "||" + In Dindigul district, 11 people are awarded by

திண்டுக்கல் மாவட்டத்தில் 11 பேருக்கு நல்லாசிரியர் விருது

திண்டுக்கல் மாவட்டத்தில் 11 பேருக்கு நல்லாசிரியர் விருது
திண்டுக்கல் மாவட்டத்தில் 11 பேர் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல், 


ஆசிரியர் பணியில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது வழங்கப்படும். இந்தநிலையில் மாநில நல்லாசிரியர் விருது பெறுபவர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், இந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன் படி திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை அப்போலின்மேரி பெட்ரிஷியா, கம்பிளியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பிரசன்னா ஜூலியட், சின்னாளப்பட்டி தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முருகேசன், ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சகாயராஜா, நா.சு.வி.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆத்தியப்பன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல, பழனி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ராஜேந்திரன், பழனி அருகே உள்ள அத்திமரத்துவலசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கைத்தொழில் ஆசிரியர் கருணாகரன், பழனி அடிவாரம் திருவள்ளூவர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகரன், அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்தர், செந்துறை அருகே உள்ள மாமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஜேசுதாஸ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு இன்று (புதன்கிழமை) சென்னையில் நடைபெற உள்ள ஆசிரியர் தின விழாவில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.