மாவட்ட செய்திகள்

வடக்கு ஆத்தூரில்8 வயது மகளிடம் சில்மிஷம் செய்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது + "||" + The father of the lady who was eight years old Arrested in the Bochos Act

வடக்கு ஆத்தூரில்8 வயது மகளிடம் சில்மிஷம் செய்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது

வடக்கு ஆத்தூரில்8 வயது மகளிடம் சில்மிஷம் செய்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது
வடக்கு ஆத்தூரில் தான் பெற்ற 8 வயது மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
திருச்செந்தூர், 

வடக்கு ஆத்தூரில் தான் பெற்ற 8 வயது மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தொழிலாளி

வடக்கு ஆத்தூர் தபால் நிலையம் அருகில் உள்ள காம்பவுண்டு குடியிருப்பில் வசிப்பவர் சரவணன் (வயது 37). இவர் தூத்துக்குடியில் உள்ள எண்ணெய் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சுமதி (32). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

மகளிடம் சில்மிஷம்

கடந்த 27-ந்தேதி இரவில் சரவணன் தன்னுடைய குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவர் தன்னுடைய 8 வயதான மூத்த மகளிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தூங்கி கொண்டிருந்த அந்த சிறுமி அலறினார். கண்விழித்த சுமதி, கணவரின் செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சரவணனை அவர் கண்டித்தார்.

போக்சோ சட்டத்தில் கைது

இதில் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. கணவரின் செயலால் வெறுப்படைந்த சுமதி திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் செய்தார். இதை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, சரவணனை கைது செய்தார். தான் பெற்ற மகளிடமே சில்மிஷத்தில் தந்தை ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை